Recent Posts

டிஸ்பிளே போர்ட்


சில சமயம் நம் கணிணியில் அல்லது மடிக்கணிணியில் இருக்கும் வினோதமான புதியவித போர்ட்டுகள் எதற்காக இருக்கின்றனவென்றே நமக்கு தெரிவதில்லை. அப்படி புதிதாக சமீப காலங்களில் உங்கள் கண்களில் சிக்கும் ஒரு போர்ட்டு தான் ”டிஸ்பிளே போர்ட்”. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இங்கே.
படத்தில் நீங்கள் காணும் இந்த புதிய வகை ”டிஸ்பிளே போர்ட்டுகள்” சீக்கிரத்தில் VGA,DVI மற்றும் HDMI போர்ட்டுகளை பெவிலியனுக்கு அனுப்பிவிடுமாம்.மிக அதிக ரெசல்யூசன் மானிட்டர்களுக்கு இந்த போர்ட்டு வகைகள் நல்லதாம். HDMI போல இது வீடியோவோடு ஆடியோவையும் கடத்துகின்றது. அது போல ஒரு நடுபெட்டி அமைத்து பல எண்ணிக்கையில் மானிட்டர்களை ஒரு கணிணியில் இணைக்கலாமாம். பல வீடியோ கார்டுகள் தேவைப்படாது. HDMI போல இது பாயிண்ட் டூ பாயிண்ட்டாக வேலை செய்யாமல் பாக்கெட் சுவிட்சிங் முறையில் இது வேலை செய்வது இங்கு குறிப்பிடத் தக்கது. ராயல்டி இல்லாமை, விசேச கண்ட்ரோலர் தேவை இல்லாமை இவ்வகை ஹார்டுவேர்களின் விலையை குறைக்கின்றன. ஆப்பிள் கணிணிகள் இப்போதெல்லாம் அதன் விசேச mini DisplayPort-களுடன் வருகின்றன.
DisplayPort vs HDMI port comparison chart

No comments:

Post a Comment

தமிழில் எழுத