Recent Posts

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்

கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை.
இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.
KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.

பிளாகரில் கூகிளின்+ விட்ஜெட் சேர்க்க



சமிபத்திய அறிமுகமான Google + வலைதளத்தை நம்முடைய ப்ளொக்கரில் விட்ஜெட் யாக இணைக்கும் வழியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இணைய உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி கூகுள்+ வலைத்தளம் ஆகும். இதன் மூலம் மிக விரைவாக நம் நண்பர்களுடன் நாம் விரும்பும் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். மேலும் நம்முடைய கருத்தினை நம்முடைய நண்பர்களுக்கு மிகவும் எளிதில் கொண்டு சேர்க்க முடியும். அதற்கு முதலில் கூகிள்+விட்ஜெட் உங்களுடைய வலைப்பூ மற்றும் வலைத்தளத்தில் இணைக்க வேண்டும். அது எப்படி என்று பார்க்கலாம் ...
முதலில் உங்கள் Google + வலைதளத்தை ஓபன் செய்து உங்கள் Google+ ID தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய கூகுள்+ கோடினை காப்பி செய்து,வலைதளம் அல்லது வலைப்பூவில் இணைத்துக்கொள்ளவும்.

<script type="text/javascript">mbgc='f5f5f5';ww='210';mbc='cecece';bbc='3F79D5';bmobc='3b71c6';bbgc='4889F0';bmoc='3F79D5';bfc='FFFFFF';bmofc='ffffff';tlc='cecece';tc='6a6a6a';nc='6a6a6a';bc='6a6a6a';l='y';fs='11';fsb='10';bw='80';ff='4';pc='4889F0';b='s'; pid='103691815252812081936';</script><script type="text/javascript" src="http://widgetsplus.com/google_plus_widget.js"></script>
<small>Powered By: <a href='http://hariprs-personal.blogspot.com/'>Hariprs</a></small>



சிகப்பு வரியில் உங்களது கூகுள்+  கோடினை மாற்றவும்


உங்கள் வலைப்பூவில் சாதாரண விட்ஜெட்டை இணைப்பது போலவே இணைத்துக்கொள்ள முடியும்.

அதற்கு உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளவும்.

பின் Dashboard > Dashboard > Page Elements > Add a Gadget > HTML/JavaScript Add என்பதை அழுத்தி கோடினை பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும்.

தற்போது உங்களுடைய வலைப்பூவில் புதிய Google+ ID விட்ஜெட் வந்திருக்கும்.

பிளாக்கரில் தமிழ் நாள்காட்டி விட்ஜெட்





தமிழ் பிளாக்கருக்கு தேவையான தமிழ் மாதங்களை பிரதிபலிக்கும் தமிழ் நாள்காட்டி அனைவரும் இலவசமாக பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். (தமிழ் மற்றும் ஆங்கில)  நாள்காட்டி இதனுடன் இணைக்கப் பட்டுள்ளது.


 விட்ஜெட் குறியீடு சேர்த்தல்


  • Login to Blogger Dashboard -> Design tab -> Page Elements .
  • Click on Add a Gadget where you wish to place Search Box.
  • Choose HTML/JavaScript from the List. 
  •  Paste the following code in to it and Save the Gadget.


<center>
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; font-size: 14px; line-height: 19px;"><object align="middle" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" height="150" id="today" width="220"><embed src="https://sites.google.com/site/muruganandablogspotcom/nilavaithedi.swf" quality="high" bgcolor="#ffffff" width="220" height="150" name="today" align="middle" allowscriptaccess="sameDomain" allowfullscreen="false" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"></embed></object></span><br /><small>Powered By: <a href='http://hariprs-personal.blogspot.com/'>Hariprs</a></small>
</div>
</center>

இனையத்தில் பாதுகாப்பாக உலாவ ஒரு Plug in

நாம் தினமும் 10 முதல் 50 தளங்களையாவது பார்வையிடுகிரோம்.  அவைகளில் சில பாதுகாப்பான தளங்களைப் போல் காட்சியளித்தாலும்.  முழுமையாக நம்பமுடியாததாக இருக்கலாம்.  அவற்றை
பரிசோதித்து தளம் பாதுகாப்பானதான என நமக்கு

நமக்கு சொல்கிறது இந்த WOT Plug in இதை உங்கள் உலாவியில் Install செய்துக் கொள்ளுங்கள்.
அதற்க்கான லிங்க் இதொ.



நீங்களும் நீங்கள் செல்லும் தளம் பாதுகாப்பானதா இல்லையா என ஒட்டளிக்கலாம்.  இந்தியர்களுக்காக இந்தியரால் உருவாக்கப்பட்ட browser EPIC 'ல் இது Defult' ஆக இணைக்கப்பட்டு கிடைக்கிறது.



                      
                                                                           
 நாம் இதை Install செய்துவிட்டால் போதும்.  நாம் எந்த தளத்திற்க்குச் சென்றாலும் அது பாதுகாப்பானதா இல்லையா என உடனே சொல்லிவிடுகிறது.  இதனால் நாம் வைரஸ் உள்ள தளங்களை சுலபமாக கண்டறிந்து ஒதுக்கிவிடலாம்.


நாம் கூகுளில் பதிவுகளை தேடும் போதும் இது செயல்படுகிறது. இதனால் தளம் பாதுகாப்பானதா இல்லையா என்று நாம் தளத்தின் உள்ளே நுழையாமலே தெரிந்து கொண்டு தவிர்த்து விடலாம்.  இதனால் வைரஸ்களின் பிடியில் மாட்டாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

பிளாக்கரில் Navbar'ஐ மறைய வைப்பது எப்படி?


பிளாக்கரில் வலைபதிவு வைத்திருப்பவர்கள் சிலருக்கு Navbar இருப்பது பிடிக்கவில்லை அதனால் அதை அழிக்க முயற்ச்சிப்போம் அதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன், பார்த்துப் பயன்படுத்தி Navbar 'ஐ அழித்திடலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==> 
Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 


பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். 


 
#navbar-iframe {
   display: none !important;
}

/* Variable definitions
   ====================
மேலே உள்ள கோடிங்கை கண்டுபிடித்து நீல வண்ணத்தில் உள்ள கோடிங்கை  மட்டும் தான் இணைக்க வேண்டும்.

இணைத்த பிறகு Save Template என்ற பட்டனை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைதளத்தில் Navbar மறைந்துவிடும்.

A day in the life of India

Cartoon: Neelabh
Taken from Times of India.
Click on the picture to see in full size.


உங்கள் பாஸ்வேர்டைத் (Password) திருட... 10 நிமிடம் போதும்!

ரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின்நம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும்.

அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.  பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை / பின்எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக  பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.  மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்கவேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து  அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?  
இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள்,உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.



6
எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case)                : 10 நிமிடங்கள்
பெரிய எழுத்துடன்   (Upper Case)               : 10 மணி நேரம்
எண்கள், குறியீடுகள் (Num & Symbols)        : 18 நாட்கள்
 
7 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case)                 :   4 மணி நேரம்
பெரிய எழுத்துடன் (Upper Case)                 : 23 நாட்கள்
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)      : 18 நாட்கள்
8 எழுத்துக்கள்:
சிறிய எழுத்துக்கள் (Lower Case)               : 4 நாட்கள்
பெரிய எழுத்துடன்  (Upper Case)               : 3 வருடங்கள்
எண்கள்,குறியீட்டுடன்  (Num & Symbols)    : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்:

சிறிய எழுத்துக்கள் (Lower Case)               : 4 மாதங்கள்
பெரிய எழுத்துடன்  (Upper Case)              : 178 வருடங்கள்
எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)    : 44,530 வருடங்கள்

நீங்கள் காலை உணவு சாப்பிடுவதில்லையா?

பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

காலை :
காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்:

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு :

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

Text to Speech for Indic Languages

கன்னட மற்றும் தமிழ் மொழிகளுக்காக டெக்ஸ்ட் டு ஸ்பீச் by IISC,
இது மிகவும் நன்றாக வேலை செய்கிறது.

குழந்தைகளின் மனநிலை (சைக்காலஜி) தெரியுமா உங்களுக்கு?




சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறதுமிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவாஏன் அடிக்கிறீர்கள்  என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.

குழந்தைகளை கையாள்வது எப்படி..


பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம்நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்லநம்மை மையப்படுத்தி இருக்கிறதுமுதலில் அதை உணர்வோம்.


அடுத்து குழந்தை தன்னையோமற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும்சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும்விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும். 

அடிக்காமல் வளர்ப்பது எப்படி?


குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவதுசில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும்இப்படி  ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டுமுதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும்பொறுமை யின்மையின் காரணமாக,வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றனஅடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.


குழந்தை உரிமை மீறல் 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டுஇன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவாஇப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது

உதாரணமாக  8 மாதக்  குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார்அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சிதன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்திஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு  என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.


இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறதுஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறதுவாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார்ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறதுஇந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.


இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று நினைப்பார்கள் 


இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறதுகுழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்லஅவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம்ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்லஅவர்கள் இயற்கையின் வெளிப்பாடுஉங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள்அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறுநீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்ற வரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்லநம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது. 


அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாதுஅணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமாபேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம்நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால்,வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.


இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான்நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். 


ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும்நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாதுதினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா.


குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள்நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும்.   பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும் 


உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், நீ எதற்குத்தான் லாயக்கு..நீ பொறந்ததே வேஸ்ட் என்று திட்டிக்கொண்டே இருந்தால்அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக் குள்ளேயே தங்கிவிடும்சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே  அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும் 


பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும் 


எனவே, மனதளவில் பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபைஇப்படிப் பாதிக்கப்பட்ட  குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.


கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு.

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.


தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது 


ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால்,அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும்மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்துவிடக்கூடாது.


குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லதுதண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். 


பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள்அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

தமிழில் எழுத