Recent Posts

MP3 கோப்புகளை யூடியுபில் ஏற்றுவது எப்படி?



பாடல்கள், இசை போன்றவற்றை உயர்தரத்தில் துல்லியமாக கேட்க உதவும் கோப்பு வடிவம் MP3 ஆகும். இது கணினியில் குறைந்த இடத்தையே பிடிக்கும். பெரும்பாலான திரைப்படங்களின் பாடலை நீங்கள் யூடியுபில் கேட்டிருக்க முடியும். வீடியோவின் பின்புலத்தில் ஏதேனும் புகைப்படத்தை வைத்து கொண்டு பாடல்களை கேட்கும்படி தரவேற்றி இருப்பார்கள்.

உதாரணத்திற்கு இந்த வீடியோ சுட்டியை பாருங்கள். இது போன்று MP3 ஒலி கோப்புகளை யூடியுபில் தரவேற்றுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

இந்த வேலையை எளிதாக்குவதற்கு ஒரு இணைய தளம் வழி செய்கிறது. MP32Tube என்ற தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கு Click here to authenticate with YouTube என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அடுத்து  'Authorize Access to Your Account' என்று உங்கள் யூடியுப் கணக்கில் வீடியோவை தரவேற்றி கொள்ள அந்த தளத்திற்கு அனுமதி அளிக்க கோரி யூடியுப் பக்கம் தோன்றும். அதில் 'Allow Access' கிளிக் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து MP3 ஆடியோ ஒலிக்கும் போது பின்னணியில் எந்த படம் தோன்ற வேண்டும் என்பதனை தேர்வு செய்து கொண்டு, ஏற்ற வேண்டிய வீடியோவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ஆடியோ தரவேற்ற பட சிறிது நேரம் பிடிக்கும்.


அடுத்து 'Upload to Youtube' என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.உங்கள் mp3 வெற்றிகரமாக யூடியுபில் தரவேற்ற பட்டு இருக்கும்.

யூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க



யூடியுப் புகழ் பெற்ற வீடியோ தளமாகும். அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்குவதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிந்திருக்கலாம். 

சில சமயங்களில் யூடியுப் வீடியோவில் உள்ள ஒலி வடிவம் (வசனம், பாடல், இசை) உங்களுக்கு mp3 வடிவில் தேவை படலாம். அந்நேரங்களில் நீங்கள் அந்த வீடியோவை தரவிறக்கி அதனை MP3 ஆக மற்ற ஒரு மென்பொருளை தேட வேண்டி இருக்கும்.

Youtube Fisher என்ற இலவச மென்பொருள் யூடியுப் வீடியோவை MP3 ஆகவே பெறும் வசதியை அளிக்கிறது. இந்த மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.


அதை திறந்து கொண்டு அதில் 'youtube video url' என்பதில் நீங்கள் MP3 ஆக மற்ற விரும்புகிற யூடியுப் வீடியோவின் URL (உ.தா. http://www.youtube.com/watch?v=g6l6EcP6xq0) கொடுக்கவும். 'Extract Audio' கிளிக் செய்தால் ஆடியோ மட்டும் MP3 வடிவில் கோப்பாக உங்கள் கணினியில் சேமிக்கப் பட்டு விடும். வீடியோ முழுதும் தேவை பட்டால் 'download video' என்பதனை கிளிக் செய்யவும். 

கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்



கோடிக்கணக்கில் குவிந்துள்ள மென்பொருள் உலகின் நாம் தினமும் நிறையமென்பொருள்கள் பற்றி கேள்வி படுகிறோம். நம் தேவைக்கு ஏற்ப நமதுகணினியில் நிறுவியும் கொள்கிறோம். இந்த பிளாக்கில் கூட நான் இலவச மென்பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் அவற்றை உபயோகித்து பார்த்து இருப்பீர்கள்.

அவை அனைத்தும் உங்கள் கணினியில் குறிப்பிட தகுந்த இடம் பிடித்து கொண்டுஇருக்கும். சில மென்பொருள்களை சோதித்து பார்க்கும் வண்ணம் நிறுவி நீக்கமறந்து இருப்போம்.
ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஒரே மென்பொருள் குவியலாக இருக்கும். அவை அனைத்தையும் தினசரி உபயோக படுத்துகிறோமா என்றால் கிடையாது. தேவையில்லாத மென்பொருள்கள்தான் அதிகம் இருக்கும்.இவ்வாறு மென்பொருள்களை மேலும் மேலும் கணினியில் அடுக்குவதுகணினியின் செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். மெதுவாக இயங்கலாம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற மென்பொருள்களை நீக்குவது முக்கியம். Control Panel சென்று Add or Remove Programs மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக கண்டறிந்து நீக்கலாம். அப்படி நீக்கினாலும் தேவையற்ற கோப்புகள் கணினியிலே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில் மென்பொருள்களை கணினியில் அடுக்கும் போது உங்கள் கணினி திணற ஆரம்பிக்கும்.

எனவே உங்கள் கணினியில் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் தவிர மற்றவற்றை நீக்கி விடுங்கள்.
இதற்கென்று ஒரு இலவச மென்பொருள் கிடக்கிறது. இதனை பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்களை மொத்தமாக தேர்ந்தெடுத்து நீக்கி விடலாம். இதன் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். அதில் 'Batch Uninstall' என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின்பு தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Uninstall Checked Programs என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளுங்கள். இது அந்த மென்பொருள்களை எவ்வித தடயமும் இன்றி நீக்கி விடும்.

போர்டபிள் மென்பொருள் என்றால் அந்த மென்பொருளை திறக்கும் போது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும் நிறுவாது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் தேவை இன்றி அதிக இடத்தை அடைத்து கொள்ளாது. உங்கள் கணினியின் செயல்திறனை இது எந்த விதத்திலும் பாதிக்காது.

இவற்றை நீங்கள் USB Drive, IPOD, Portable Hard Drive உள்ளிட்ட எவற்றிலும் நிறுவி கொள்ளலாம். ஏன் உங்கள் மொபைலின் மெமரியில் நிறுவி வைத்து கொண்டு நீங்கள் செல்லும் இடங்களில் உபயோகித்து கொள்ளலாம். இவற்றை இயக்க நீங்கள் உபயோகப்படுத்தும் கணினிகளில் பிரத்தியேக கூடுதல் மென்பொருள்கள் தேவை இல்லை.

இவற்றின் கூடுதல் பயன்பாடுகளை கூறுகிறேன். பயர்பாக்ஸ், குரோம் போன்ற இணைய உலாவிகளை புக்மார்க்ஸ், சேமித்த பாஸ்வோர்ட் சேதாரம் இன்றி உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று எந்த கணினியில் வேண்டுமானாலும் அங்கே பிரத்தியேகமாக நிறுவாமல் உபயோகிக்க முடியும்.

ஓபன் ஆபீஸ் மென்பொருளையே உங்களுடன் கோப்புகளுடன் எடுத்து சென்று எந்த கணினியிலும் உபயோகப்படுத்த முடியும். இது போன்று பல வசதிகள் உண்டு. மேலும் இது குறித்து அறிய இங்கேசெல்லவும்.

இந்த போர்டபிள் மென்பொருள்கள் இலவசமாகவே இந்த தளத்தில் http://portableapps.com/appsகிடைக்கிறது . பயர்பாக்ஸ், குரோம், ஓபன் ஆபீஸ், VLC Media Player முதல் மிகவும் உபயோகம் உள்ள மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைக்கின்றன. வேண்டுபவற்றை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.


மேலும் உபயோகப்படுத்தப்படாத கோப்புகளை Disk Max என்ற மென்பொருள் கொண்டு நீக்கலாம். இதுவும் இலவச மென்பொருள்தான். இதனை இங்கு சென்று தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இது உங்கள் கணினியில் தேவை இன்றி குப்பையாக இருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்கும். மற்றும் உங்கள் கணினியின் செயல்திறனை மேம்படுத்தும். 

லினக்ஸ் பதிப்புகளை USB மூலம் சோதிக்க/நிறுவ



லினக்ஸ் திறந்த மூல இயங்குதள மென்பொருள் என்பதால் பல வடிவங்களில் இணையத்தில் தரவிறக்க கிடைக்கின்றன. அவற்றில் Ubuntu, Suse, Debian, Slackware, Fedora, Mandriva, Knoppix, Gentoo, Mepis, Xandros, Linux Mint உள்ளிட்டவை பிரபலமாக இருக்கின்றன.

இவை பெரும்பாலும் இணையத்தில் ISO கோப்புகளாக தரவிறக்கத்திற்கு கிடைக்கின்றன. இவற்றை நீங்கள் தரவிறக்கி CD அல்லது DVD யில் எழுதி கணினியில் நிறுவுவதற்கோ , சோதித்து பார்ப்பதற்கோ உபயோகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் பல CD/DVD கள் வீணாவது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அல்லாமல் எப்படி USB யில் லினக்ஸ் பதிப்புகளை நிறுவி Live USB யாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு UnetBootin எனும் இலவச மென்பொருள் பயன்படுகிறது. இதன் மூலம் நீங்கள் தரவிறக்கும் லினக்ஸ் ISO கோப்புகளை USB யில் எழுதி அதன் மூலம் பூட் செய்து லினக்ஸ்சை உங்கள் கணினியில் சோதித்து பார்த்து கொள்ளலாம்.

இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கி திறந்து கொள்ளுங்கள். இதனை உபயோகிக்கும் போது இரண்டாவது தேர்வான "Disk Image" என்பதனை தேர்வு செய்து கொண்டு, நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள லினக்ஸ் பதிப்பு ISO கோப்பினை தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உங்கள் USB டிரைவ் எழுத்தினை தேர்வு செய்து கொண்டு OK கிளிக் செய்து USB யில் எழுதி கொள்ளுங்கள்.


அடுத்து உங்கள் கணினியை துவங்கும் போது கீபோர்ட்டில் F2 அல்லது Del பட்டன்களை அழுத்தி தோன்றும் CMOS திரையில் Boot From USB என்பதனை அமைத்து கொள்ளுங்கள். இனி உங்கள் கணினி USB மூலம் பூட் ஆகி லினக்ஸ் மூலம் இயங்கும்.

தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தரவிறக்க



இன்று நேரம் கிடைத்த போது இணையத்தில் தமிழ் எழுத்துருக்களுக்காக தேடினேன். சில நல்ல எழுத்துருக்கள் கிடைத்தன. அவற்றை பகிர இந்த இடுகை.

தமிழ் யூனிகோட் எழுத்துருக்களை பொறுத்தவரை சிலர் தன்னார்வத்தில் பல எழுத்துருக்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். அந்த எழுத்துருக்களை அறிந்து கொள்ள அழகி இணையதளத்தின்இந்த பக்கம் மிகவும் உதவியது.

ஹாய்கோபி இணையதளத்தில் அட்டகாசமான சில எழுத்துருக்களை காண நேர்ந்தது. மொத்தம் பத்து எழுத்துருக்கள் உள்ளன. இந்த சுட்டிக்கு சென்று உங்களுக்கு தேவையானவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள். எழுத்துருக்களின் மாதிரி வடிவ படங்களும் அந்த பக்கத்தில் உள்ளன.


ILDC தளத்தின் இந்த சுட்டியில் மொத்தம் ஐம்பது எழுத்துருக்கள் உள்ளன. அனைத்து ஒருங்கிணைக்கப்பட்டு ZIP வடிவில் கிடைக்கின்றன. நேரடியாக தரவிறக்க இந்த சுட்டியை கிளிக் செய்யவும். தரவிறக்கிய பின் ZIP கோப்பை தனியே ஒரு போல்டரில் Extract செய்து கொள்ளவும். இந்த எழுத்துருக்களின் மாதிரி வடிவங்களை இந்த சுட்டியில் காணவும்.

மேலும் சில தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் இந்த சுட்டி, இந்த சுட்டிகளில் உள்ளன. மாதிரி வடிவங்களும் உள்ளன. தேவையானவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.


தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும். அனைத்து எழுத்துரு கோப்புகளையும் செலக்ட் செய்து Copy செய்து கொள்ளவும். Copy செய்த இந்த கோப்புகளை My Computer திறந்து கொண்டு C: -> Windows -> Fonts என்ற போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.

இனி எழுத்துருக்களை நீங்கள் உபயோகிக்க விரும்பும் இடங்களில் நீங்கள் நிறுவிய எழுத்துருக்கள் கிடைக்கும்.


இந்த அருமையான எழுத்துருக்களை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ளுவோம். உங்களுக்கு மேலும் தமிழ் யூனிகோட் எழுத்துருக்கள் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

இணையப் பக்கங்களை பிடிஎப் கோப்பாக சேமிக்க



பிடிஎப்(PDF) பரவலாக உபயோகிக்கப்படும் கோப்பு வடிவம். தகவல்களை பிடிஎப்(PDF) வடிவில் இணையத்தில் பகிர்ந்து வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். பிடிஎப் ரீடர் உள்ள எவருமே இந்த கோப்புகளை படித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் காணும் இணையதளங்கள், இணையப் பக்கங்களை நீங்கள் ஆன்லைனில் இல்லாத போது படித்துக் கொள்ள பிடிஎப் கோப்பாக மாற்றி உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமாக எளிதில் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான சிறந்த சேவையை நீண்ட நாட்களாக தேடி கொண்டிருந்தேன்.

பல்வேறு இணையதளங்கள் இது போன்ற சேவையை வழங்கினாலும் திருப்திகரமாக இல்லை. சில சேவைகளில் படங்கள் சரியாக தெரிவதில்லை. சிலவற்றில் தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை.


PDFMyUrl.com இந்த சேவையை வழங்குவதில் இந்த தளம் மிக சிறந்ததாக இருக்கிறது. இணைய பக்கத்தில் உள்ள படங்கள், அதன் வடிவம் முழுமையாக பிடிஎப் கோப்பாக சேமிக்கப்படுகிறது.  URL பகுதியில் நீங்கள் பிடிஎப் ஆக மாற்ற வேண்டிய இணையப் பக்கத்தின் முகவரியை (URL) கொடுத்து என்டர் தட்டினால் போதுமானது. அந்த பக்கம் பிடிஎப் கோப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.

இதனை செயல்படுத்துவதற்கு எளிதான வழி ஒன்றும் இருக்கிறது. இந்த  PDFmyURL  புக்மார்க்லெட் சுட்டியை இழுத்து உங்கள் இணைய உலாவியின் புக்மார்க் டூல்பாரில் விட்டு விடுங்கள் (Drag that PDFmyURL link and drop in bookmark toolbar of your browser like firefox, chrome). பொதுவாக புக்மார்க்லெட் நிறுவுவது எப்படி? என்ற விளக்கத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும். நீங்கள் ஒரு இணையப் பக்கத்தில் இருக்கும் போது இந்த புக்மார்க்லெட்டை கிளிக் செய்தால் போதுமானது. அந்த பக்கம் பிடிஎப்பாக உங்கள் கணினியில் தரவிறக்கப்பட்டு விடும்.

நமது வலைப்பதிவின் இடுகைகளையும் இன் நீங்கள் பிடிஎப் கோப்பாக தரவிறக்கி கொள்ள முடியும். ஒவ்வொரு இடுகையின் கீழே இதற்கான வசதியை அளித்து உள்ளேன். 'Download this post as PDF' என்பதனைக் கிளிக் செய்தாலே போதுமானது. இதன் பிடிஎப் கோப்பு உங்களுக்கு கிடைத்து விடும். இதன் மூலம் இடுகைகளை உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

டாரண்ட் உலகம்

This summary is not available. Please click here to view the post.

101 Useful websites about


01. screenr.com – record movies of your desktop and send them straight to YouTube.

02. bounceapp.com – for capturing full length screenshots of web pages.
03. goo.gl – shorten long URLs and convert URLs into QR codes.
04. untiny.me – find the original URLs that’s hiding behind a short URLs.
05. localti.me – know more than just the local time of a city
06. copypastecharacter.com – copy special characters that aren’t on your keyboard.
07. topsy.com – a better search engine for twitter.
08. fb.me/AppStore – search iOS app without launching iTunes.
09. iconfinder.com – the best place to find icons of all sizes.
10. office.com – download templates, clipart and images for your Office documents.
11. woorank.com – everything you wanted to know about a website.
12. virustotal.com – scan any suspicious file or email attachment for viruses.
13. wolframalpha.com – gets answers directly without searching – see more wolfram tips.
14. printwhatyoulike.com – print web pages without the clutter.
15. joliprint.com – reformats news articles and blog content as a newspaper.
16. isnsfw.com – when you wish to share a NSFW page but with a warning.
17. e.ggtimer.com – a simple online timer for your daily needs.
18. coralcdn.org – if a site is down due to heavy traffic, try accessing it through coral CDN.
19. random.org – pick random numbers, flip coins, and more.
20. mywot.com – check the trust level of any website – example.
21. viewer.zoho.com – Preview PDFs and Presentations directly in the browser.
22. tubemogul.com – simultaneously upload videos to YouTube and other video sites.
23. truveo.com – the best place for searching web videos.
24. scr.im – share you email address online without worrying about spam.
25. spypig.com – now get read receipts for your email.
26. sizeasy.com – visualize and compare the size of any product.
27. whatfontis.com – quickly determine the font name from an image.
28. fontsquirrel.com – a good collection of fonts – free for personal and commercial use.
29. regex.info – find data hidden in your photographs – see more EXIF tools.
30. tineye.com – this is like an online version of Google Googles.
31. iwantmyname.com – helps you search domains across all TLDs.
32. tabbloid.com – your favorite blogs delivered as PDFs.
33. join.me – share you screen with anyone over the web.
34. onlineocr.net – recognize text from scanned PDFs and images – see other OCR tools.
35. flightstats.com – Track flight status at airports worldwide.
36. wetransfer.com – for sharing really big files online.
37. pastebin.com – a temporary online clipboard for your text and code snippets.
38. polishmywriting.com – check your writing for spelling or grammatical errors.
39. awesomehighlighter.com – easily highlight the important parts of a web page.
40. typewith.me – work on the same document with multiple people.
41. whichdateworks.com – planning an event? find a date that works for all.
42. everytimezone.com – a less confusing view of the world time zones.
43. warrick.cs.odu.edu – you’ll need this when your bookmarked web pages are deleted.
44. gtmetrix.com – the perfect tool for measuring your site performance online.
45. imo.im – chat with your buddies on Skype, FacebookGoogle Talk, etc. from one place.
46. translate.google.com – translate web pages, PDFs and Office documents.
47. youtube.com/leanback – enjoy a never ending stream of YouTube videos in full-screen.
48. similarsites.com – discover new sites that are similar to what you like already.
49. wordle.net – quick summarize long pieces of text with tag clouds.
50. bubbl.us – create mind-maps, brainstorm ideas in the browser.
51. kuler.adobe.com – get color ideas, also extract colors from photographs.
52. followupthen.com – setup quick reminders via email itself.
53. lmgtfy.com – when your friends are too lazy to use Google on their own.
54. tempalias.com – generate temporary email aliases, better than disposable email.
55. pdfescape.com – lets you can quickly edit PDFs in the browser itself.
56. faxzero.com – send an online fax for free – see more fax services.
57. feedmyinbox.com – get RSS feeds as an email newsletter.
58. isendr.com – transfer files without uploading to a server.
59. tinychat.com – setup a private chat room in micro-seconds.
60. privnote.com – create text notes that will self-destruct after being read.
61. flightaware.com – live flight tracking service for airports worldwide.
62. boxoh.com – track the status of any shipment on Google Maps – alternative.
63. chipin.com – when you need to raise funds online for an event or a cause.
64. downforeveryoneorjustme.com – find if your favorite website is offline or not?
65. example.com – this website can be used as an example in documentation.
66. whoishostingthis.com – find the web host of any website.
67. google.com/history – found something on Google but can’t remember it now?
68. errorlevelanalysis.com – find whether a photo is real or a photoshopped one.
69. google.com/dictionary – get word meanings, pronunciations and usage examples.
70. urbandictionary.com – find definitions of slangs and informal words.
71. seatguru.com – consult this site before choosing a seat for your next flight.
72. sxc.hu – download stock images absolutely free.
73. imo.im – chat with your buddies on Skype, Facebook, Google Talk, etc. from one place.
74. wobzip.org – unzip your compressed files online.
75. vocaroo.com – record your voice with a click.
76. scribblemaps.com – create custom Google Maps easily.
77. buzzfeed.com – never miss another Internet meme or viral video.
78. alertful.com – quickly setup email reminders for important events.
79. encrypted.google.com – prevent your ISP and boss from reading your search queries.
80. formspring.me – you can ask or answer personal questions here.
81. snopes.com – find if that email offer you received is real or just another scam.
82. typingweb.com – master touch-typing with these practice sessions.
83. mailvu.com – send video emails to anyone using your web cam.
84. ge.tt – quickly send a file to someone, they can even preview it before downloading.
85. timerime.com – create timelines with audio, video and images.
86. stupeflix.com – make a movie out of your images, audio and video clips.
87. aviary.com/myna – an online audio editor that lets record, and remix audio clips online.
88. noteflight.com – print music sheets, write your own music online (review).
89. disposablewebpage.com – create a temporary web page that self-destruct.
90. namemytune.com – when you need to find the name of a song.
91. homestyler.com – design from scratch or re-model your home in 3d.
92. snapask.com – use email on your phone to find sports scores, read Wikipedia, etc.
93. teuxdeux.com – a beautiful to-do app that looks like your paper dairy.
94. livestream.com – broadcast events live over the web, including your desktop screen.
95. bing.com/images – automatically find perfectly-sized wallpapers for mobiles.
96. historio.us – preserve complete web pages with all the formatting.
97. dabbleboard.com – your virtual whiteboard.
98. whisperbot.com – send an email without using your own account.
99. sumopaint.com – an excellent layer-based online image editor.
100. lovelycharts.com – create flowcharts, network diagrams, sitemaps, etc.
101. nutshellmail.com – Get your Facebook and Twitter streams in your inbox.

தமிழில் எழுத