Recent Posts

தமிழில்..டைப் செய்வது எப்படி ?


நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?

நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். நான் இங்கு மூன்று வழிகள் விளக்கி உள்ளேன்.

1. கூகுளின் தமிழ் எழுதி


கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது.கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது.

இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம்.

இதற்கு கூகுளின் ஐஎம்ஈ(IME) எனும் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7   இயங்குதளங்களில் வேலை செய்யும்.

இதனை தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து உங்கள் கணினியில் 'Start' மெனுவை கிளிக் செய்து Control Panel சென்று கொள்ளுங்கள். அங்கு Region and Language என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
தோன்றும் விண்டோவில் Keyboards and Languages என்பதில் Change Keyboards என்பதை கிளிக் செய்து கொண்டு Google Tamil Input என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். விளக்கத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

அவ்வளவுதான் இனி நீங்கள் கணினியில் இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ள F12 விசையை (F12 Key) அழுத்தி கொள்ளவும்.

இனி நீங்கள் தமிழில் தட்டச்சும் போது எல்லாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கூகுளுக்கு நன்றி.


2. மைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி



இணையத்தில் உலவிய போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதற்காக ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளதை அறிய முடிந்தது.

இந்த வசதியை மைக்ரோசாப்ட் இணைய பதிப்பு, டெஸ்க்டாப் பதிப்பு என்று இரண்டு வடிவங்களில் வெளியீட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, இணையம் என்று எல்லா இடங்களிலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ள முடியும். தமிழ் எழுதியை போன்றே நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடன் வருகிறது. இதனால் தமிழில் நாம் தட்டச்சு செய்யும் போது வரும் பிழைகளை தவிர்க்க இயலும்.


கூகிள் தமிழ் எழுதியை நிறுவியதை போன்றே இதனை நீங்கள் நிறுவ வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, புக்மார்க்லெட்டாக நிறுவி கொள்ள இங்கே சென்று வழிமுறைகளைபார்க்கவும். புக்மார்க்லெட்டாக இணைய உலாவிகளில் நிறுவி கொண்டால் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம். இதற்கு இணைய இணைப்பு தொடர்ச்சியாக அவசியம்.

இணைய இணைப்பு இன்றி கணினியில் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்து கொள்ள இதன் டெஸ்க்டாப் பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இதனை தரவிறக்கஇங்கே செல்லுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7லில் எப்படி நிறுவுவது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். படங்களுடன் புரியும்படி விளக்கி உள்ளனர்.

கூகிள் தமிழ் எழுதியா? மைக்ரோசாப்ட் தமிழ் எழுதியா? என்று கேட்டால் சட்டென்று சொல்ல இயலவில்லை. இரண்டுமே எளிதாகத்தான் உள்ளது. சில நாட்கள் உபயோகப்படுத்தி பார்த்து விட்டு முடிவு செய்யலாம். 




3. eKalappai

முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappai எனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.

2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.

3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.

4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும்

5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.
உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.

பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?

பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)

*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்

No comments:

Post a Comment

தமிழில் எழுத